திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

 360 டிகிரி கேமரா!

சாதாரண கேமரா மூலம் ஓர் அறையின் உள்பகுதி முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டுமானால் நாம் பகுதி, பகுதியாகத்தான் படம் எடுக்க முடியும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:20 pm

எஸ். நாராயணன்

சாதாரண கேமரா மூலம் ஓர் அறையின் உள்பகுதி முழுவதையும் புகைப்படம் எடுக்க வேண்டுமானால் நாம் பகுதி, பகுதியாகத்தான் படம் எடுக்க முடியும். ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள 360 டிகிரி கேமரா மூலம் ஒரே தடவையில் அறை முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிடலாம்.

Story image

கேமராவை அதற்குரிய குச்சியில் இணைத்துக் கொண்டு கையில் எடுத்துச் சென்றும் இயக்கலாம். தூரத்தில் ஓர் இடத்தில் நிலையாக வைத்துக் கொண்டு செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்ட செயலி மூலமாகவும் இயக்கலாம்.

Story image

இந்த கேமராவில் இணைக்கப்பட்டுள்ள லென்சுகள் (தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப லென்சுகளின் எண்ணிக்கை மாறுபடும்) ஒரே சமயத்தில் 360 டிகிரி கோணத்தில்  புகைப்படங்களை எடுக்கிறது. பின்னர் சரியான கோணத்தில் அவற்றை பிசிறு இன்றி குறுகிய நேரத்தில் ஒரே படமாக இணைத்தும் தருகிறது. இவ்வாறு இணைக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளை கேமராவிலிருந்து நேரடியாக செல்போன், தொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் மேலிருந்து கீழாகவோ, வலம்-இடமாகவோ 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.

Story image

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற கேமராக்கள் வெளிவந்தாலும் GoPros, GIROPTIC, Samsung   உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதன் தரத்தை உயர்த்தி தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. படத்தின் தரம், தயாரிப்பு நிறுவனம், கேமராவின் சேமிப்புதிறன், ஆடியோ ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு விலைகளில் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.